”தங்கபஸ்பம்” என அழைக்கப்படும் செம்பருத்தி! ஒருமுறை இந்த ஜூஸ் குடித்தால் போதும்!
என்னது தங்க பஸ்பமா? அப்படி தானே கேட்கிறீர்கள். அது வேற ஒன்றும் இல்லை. செம்பருத்தி பூ தான். அந்த காலத்தில் செம்பருத்தி பூவை தங்க பஸ்பம் என சித்தர்கள் அழைத்துள்ளனர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெம்பருத்தி பூ இதய நோயை குணப்படுத்தும் என்பதும் அதன் கூடுதல் சிறப்பு. இதயம் பலவீனமானவர்கள், இதய அடைப்பு உள்ளவர்கள் செம்பருத்தி பூவின் ஜூஸ் அல்லது செம்பருத்தி பூ டீ குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
10 செம்பருத்தி பூக்களை எடுத்து கொண்டு அதன் மகரந்தத்தை நீக்கி விட்டு, குளிர்ந்த நீரில் கவிழு எடுத்து கொள்ள வேண்டும். அந்த பூக்களை மிக்ஸி அல்லது உரலில் வைத்து நன்றாக அரைத்து எடுத்து கொள்ள வேண்டும்.
அரைத்த செம்பருத்தி பூ வழவழப்பு தன்மையுடன் இருக்கும். அதனால், சுத்தமான காட்டன் துணியை வைத்து அரைத்த செம்பருத்தி பூவின் சாற்றை, தேவைக்கு ஏற்ப தண்ணீர் சேர்த்து பிழிந்து எடுத்து கொள்ள வேண்டும்.
லுமிச்சைச்சாறு சேர்த்ததும் செம்பருத்தி சாறின் நிறம் இளம்சிவப்பாக மாறும். பின்னர், தேவைக்கு ஏற்ப தேன் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் கூடுதலாக சப்ஜா விதைகளையும், சிறிது புதினா இலைகளையும் சேர்த்து கொள்ளலாம்.
இந்த ஜூஸை வாரத்தில் 3 முதல் 5 முறை குடித்து வந்தால் இதய பலப்படுவதுடன், ரத்த குழாய் அடைப்பு பிரச்சனை சரியாகும். உடலின் ரத்தம் சுத்தப்படுத்தப்படும். ஹீமோகுளோபின் அளவும் அதிகரிக்க செய்யும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -