Pallipalayam Mushroom Fry: புரதச்சத்து நிறைந்தது- பள்ளிப்பாளையம் காளான் ஃப்ரை ரெசிபி!
காளான் புரதத்தின் சிறந்த மூலமாகும். இறைச்சியை விரும்பாதவர்கள், புரதத் தேவையை பூர்த்தி செய்ய உணவில் அடிக்கடி காளான் சேர்த்துக் கொள்ளலாம். காளான்கள் புரதத்தின் கட்டுமானத் தொகுதியான அமினோ அமிலங்களை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமுதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடானதும், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
அதில் தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும். அதில் நறுக்கிய காளான் மற்றும் தேங்காய் துண்டுகளை சேர்த்து கிளறி விட வேண்டும்.
அதில் உப்பு, மஞ்சள் தூள், மல்லித் தூள், கரம் மசாலா மற்றும் மிளகுத்தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவேண்டும்.
image 5
அதில் 1/4 கப் தண்ணீரை சேர்த்து, மூடி வைத்து 2-3 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
காளான் நன்கு வெந்ததும், இறக்கி மேலே சிறிது தேங்காய் எண்ணெய் மற்றும் சிறிது மிளகுத்தூள் தூவி இறக்கினால், சுவையான பள்ளிப்பாளையம் காளான் ப்ரை தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -