Palak Dal : சாதத்திற்கு நல்ல காம்பினேஷன்..பாலக்கீரை பருப்பு ரெசிபி!
ஒரு கப் துவரம் பருப்பை நன்கு கழுவி விட்டு குக்கரில் சேர்த்து ஒன்றறை கப் தண்ணீர் சேர்த்து கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கி கொள்ள வேண்டும். குக்கரில் ப்ரஷர் இறங்கியதும் பருப்பை ஒன்றும் பாதியுமாக மசித்து விட வேண்டும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஒரு கட்டு பாலக்கீரையை தண்ணீரில் இரண்டு மூன்று முறை கழுவி நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் ஒரு ஸ்பூன் கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும். பொரிந்ததும் ஒரு ஸ்பூன் உளுந்து பருப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும். பின் நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதங்கியதும், 2 கீறிய பச்சை மிளகாயை சேர்த்துக் கொள்ள வேண்டும். 3 காய்ந்த மிளகாயை கிள்ளி சேர்த்துக்கொள்ள வேண்டும்.
மசித்து வைத்துள்ள பருப்பை இதில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த ரெசிபி சற்று கெட்டிப் பதத்தில் இருந்தால் நன்றாக இருக்கும். எனவே அதற்கேற்றவாறு தண்ணீர் சேர்க்கவும்.
இப்போது தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும். இப்போது ஒரு கிராம் கரம் மசாலா சேர்த்து கலந்து விட்டு ஒரு கொதிவந்ததும் இறக்கி கொள்ளவும்.
இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து விட்டு இறக்கி கொள்ள வேண்டும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -