Early Rise Benefits : வாழ்க்கையில் வெற்றி பெற தினமும் விடியற்காலையில் எழுந்துக்கோங்க!
காலையில் விரைவாக எழுந்து முக்கியமான வேலைகளை செய்ய ஆரம்பிக்கலாம். அதிகாலை எழுபவர்கள் ஆக்டிவாக இருப்பார்கள்.
காலையில் சீக்கிரமாக எழும்பொழுது தெளிவான மனநிலையோடு அன்றைய நாளை தொடங்குவீர்கள். காலை நேரத்தில் கிடைக்கக்கூடிய இந்த மனத்தெளிவு அன்றைய நாளை சிறப்பாகும்.
அதிகாலை எழுந்தவுடன் யோகா, உடற்பயிற்சி செய்யலாம், காலை உணவை நிதானமாக சாப்பிடலாம், செல்ல வேண்டிய இடத்திற்கு சரியான நேரத்திற்கு செல்லவதற்கு உதவியாக இருக்கும்
காலையை உடற்பயிற்சியோடு ஆரம்பிக்கும் போது ஆற்றல் அளவு, மனநிலை போன்றவை மேம்படலாம். உடல் எடையை கட்டுக்குள் வைத்து, நாள்பட்ட நோய்களின் அபாயத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
சுய ஒழுக்கம் வந்துவிட்டால், பழக்க வழக்கங்கள், நடவடிக்கைகள் மீதான கட்டுப்பாட்டை பெறலாம். மேலும் தன்னம்பிக்கை அதிகரித்து இலக்குகளை எளிதாக அடைந்து வாழ்க்கையில் வெற்றி பெறலாம்
தொடர்ச்சியாக காலை எழுவதற்கு பழக்கப்படுத்திக் கொள்ளும் பொழுது உடலும் கடிகாரம் போல் அதற்கு ஏற்றவாறு தன்னை ஒழுங்கு செய்து கொள்ளும். மேலும் இதன் மூலமாக தூக்கத்தின் தரம் மேம்படலாம்