Orange Phirni Recipe: பக்ரீத்துக்கு சூப்பரான ஆரஞ்சு பிர்னி செய்து அசத்துங்க..! ரெசிபி இதோ..!
இந்த பக்ரீத்க்கு என்ன ஸ்வீட் செய்யலாம் என்று யோசிக்கிரீர்களா?..இதோ புதிய, சுவை நிறைந்த ஆரஞ்சு பிர்னியை செய்து உங்கள் பெருநாளை கூடுதல் சிறப்பானதாக மாற்றுங்கள்!
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதேவையான பொருட்கள்: பாஸ்மதி அரிசி - 1/2 கப், ஆரஞ்சு - 2, காய்ச்சிய பால் - 1 லிட்டர், சர்க்கரை - 3/4 கப், ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி, குங்குமப்பூ, ஆரஞ்சு தோல், பிஸ்தா நறுக்கியது, பாதாம் நறுக்கியது.
செய்முறை: முதலில் பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி 1 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறிய அரிசியை நன்கு வடிகட்டி, மிக்ஸியில் போட்டு கொர கொரப்பாக அரைக்கவும்.
கடாயில் பாலை சூடாக்கி, அரைத்த அரிசியை போட்டு வேகவைக்கவும். அரிசி நன்கு வெந்ததும், இதில் சர்க்கரை சேர்த்து கிளறவும். பின் இதில் ஏலக்காய் தூள், குங்கும பூ, சேர்த்து கிளறவும்.
பிறகு அடுப்பை அணைத்து , பிர்னியை நன்கு ஆறவிடவும். பிர்னி நன்கு ஆறியபின், இதில் ஆரஞ்சு தோலை துருவி சேர்க்கவும்.
அடுத்து இதில் ஆரஞ்சு ஜூஸ் ஊற்றி கிளறவும். இறுதியாக இதில் நறுக்கிய பாதாம், நறுக்கிய பிஸ்தா தூவி பரிமாறவும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -