Cucumber sandwich recipe: சத்தான சுவையான ஈவ்னீங்க் ஸ்நாக்ஸ்..வெள்ளரிக்காய் சான்விட்ச் ரெசிபி இதோ!
பள்ளி முடிந்து வீடு திரும்பும் குழந்தைகள் ஸ்நாக்ஸ் கேட்டு நச்சரிக்கிறார்களா? இதோ இந்த சத்துகள் நிறைந்த வெள்ளரிக்காய் சான்விட்ச் செய்து கொடுங்கள்!
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதேவையான பொருட்கள்: பிரட் துண்டுகள், வெள்ளரிக்காய், கிரீம் சீஸ் - 200 கிராம், எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் ஆயில் - 2 தேக்கரண்டி,மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி, புதினா இலை நறுக்கியது, கொத்தமல்லி இலை நறுக்கியது, எலுமிச்சைபழச்சாறு - 1/2 தேக்கரண்டி.
முதலில் ஒரு பவுலில் க்ரீம் சீஸ் போட்டு அதில் ஆலிவ் ஆயில், மிளகு தூள், நறுக்கிய புதினா இலை, நறுக்கிய கொத்தமல்லி இலை, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து ஓரமாக வைத்து விட வேண்டும்.
அதன் பிறகு, வெள்ளரிக்காயை நன்றாக கழுவி வட்ட வட்டமாக வெட்டி எடுத்து கொள்ளவும்.
பின்னர், பிரட் துண்டுகளை எடுத்து ஒரங்களை வெட்டி ஒரு பிரட் துண்டின் மேல் க்ரீம் சீஸ் கலவையை கலந்து அதன் மேலே வெள்ளரி துண்டுகளை வைத்து கொள்ள வேண்டும்.
பிறகு இன்னோரு பிரட் துண்டை எடுத்து அதிலும் சீஸ் கலவை தடவி வெள்ளரி வைத்த பிரட் துண்டின் மேல் வைத்து மூடி விட வேண்டும் அவ்வளவு தான் வெள்ளரிக்காய் சான்விட்ச் ரெடி!
- - - - - - - - - Advertisement - - - - - - - - -