ஒரு நாளைக்கு எவ்வளவு பாதாம் சாப்பிடலாம்? நிபுணர்களின் பரிந்துரை இதுதான்!
பாதாம், முந்திரி, பிஸ்தா உள்ளிட்ட நட்ஸ் வகைகளை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவது நல்லது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இப்படி செய்வதால் நினைவாற்றல் அதிகரிக்க, எலும்பின் அடந்த்தி அதிகரிக்க உள்ளிட்ட நன்மைகள் கிடைக்கும். ஆனால், ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிட வேண்டும் என்ற அளவு முக்கியம் என்று சொல்லப்படுகிறது.
பாதாமில் ஒமேகா -3 ,6 ஃபாட்டி ஆசிட்ஸ், வைட்டமின்ஸ், ஆண்டி - ஆக்ஸிடண்ட்ஸ் உள்ளிட்டவை இருப்பதால் இதய ஆரோக்கியத்திற்கு உதவும்.
தினமும் பாதாம் சாப்பிடுவது உடல்நலனுக்கு உதவும் என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஒரு நாளைக்கு 30 கிராம் நட்ஸ் சாப்பிடுவது நல்லது என்று பரிந்துரைக்கப்படுகிறது. அதற்கு மேல் சாப்பிடுவதில் எந்த நன்மையும் இல்லை என்று சொல்லப்படுகிறது. பாதாம் ஊற வைத்து சாப்பிடுவது பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில், அப்படியே சாப்பிடுவதை விட, உப்பு சேர்த்து வறுத்து சாப்பிடுவதை விட தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடுவது அதில் இருக்கும் ஊட்டச்சத்துகள் உறிஞ்சுவதற்கு உதவும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.