Onion Tomato Raita Recipe: குயிக்கா..டேஸ்டா..சூப்பரான ரெசிபி..இதோ இந்த வெங்காயம் தக்காளி ரைத்தா செய்து அசத்துங்கள்!
சமைக்க நேரம் இல்லையா..? குறுகிய நேரத்தில் சூப்பரான சாப்பாடு செய்ய வேண்டுமா..? யோசனையே வேண்டாம் இந்த இந்த வெங்காயம் தக்காளி ரைத்தா செய்துவிடுங்கள்!
தேவையான பொருட்கள்: வெங்காயம் தக்காளி ரைத்தா செய்ய: தயிர் - 1 கப், தக்காளி - 1 நறுக்கியது, வெங்காயம் - 1 நறுக்கியது, கல் உப்பு - 1 தேக்கரண்டி, கொத்தமல்லி இலை நறுக்கியது, பச்சை மிளகாய் - 2 நறுக்கியது, இஞ்சி நறுக்கியது, தேங்காய் நறுக்கியது - 1 மேசைக்கரண்டி.
தாளிப்பதற்கு: எண்ணெய் - 2 தேக்கரண்டி, கடலை பருப்பு - 1 தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி, கடுகு - 1/2 தேக்கரண்டி, சீரகம் - 1/2 தேக்கரண்டி, வெந்தயம், பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை.
செய்முறை: முதலில் பாத்திரத்தில் தயிர் ஊற்றி கட்டி இல்லாமல் அடித்து கொள்ளவும். பின்பு அதில் நறுக்கிய தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி இலை, கல் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
பிறகு மிக்ஸியில் பச்சை மிளகாய், இஞ்சி, நறுக்கிய தேங்காய் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் கொரகொரப்பாக அரைக்கவும். பின்பு அரைத்த மசாலாவை தயிரில் ஊற்றி கலந்துவிடவும். அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம், வெந்தயம் சேர்த்து கலந்துவிடவும்.
பின்பு பெருங்காயத்தூள், மஞ்சள் தூள், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து கலந்து இறக்கவும்.பிறகு தயிரில் சேர்த்து கலந்து பரிமாறவும். அருமையான வெங்காயம் தக்காளி ரைத்தா தயார்!