Onion rings recipe : மாலை ஸ்நாக்ஸ் செய்து முடிக்க நேரம் ஆகுதா? சிம்பிளான ஆனியன் ரிங்க்ஸ் செய்து மகிழுங்கள்!
வடை போண்டா செய்து அலுப்பாகி விட்டதா? ஸ்நாக்ஸ் செய்ய அதிக நேரம் செலவிட்டு சலித்துவிட்டீர்களா? இதோ இந்த சுவையான சுலபமான ஆனியன் ரிங்க்ஸ் செய்து அசத்துங்கள்.
தேவையான பொருட்கள் : வெங்காயம் 5, மைதா 1 1/2 கப், கார்ன் ப்ளோர் 1/2 கப், மிளகாய் தூள் 1 ஸ்பூன், மிளகு, உப்பு, தண்ணீர், ப்ரட் க்ரம்ப்ஸ்.
செய்முறை : முதலில் வெங்காயத்தை திக்கான வளையங்களாக வெட்டி தனித்தனியாக பிரித்து கொள்ளவும்.
பிறகு ஒரு பவுலில் மைதா, கார்ன் ப்ளோர், மிளகாய் தூள், மிளகு, உப்பு சேர்த்து அதில் வெங்காய வளையங்களை புரட்டி எடுத்து கொள்ளவும்.
அதன்பின் பவுலில் உள்ள கலவையில் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும். அந்த மாவில் வெங்காய வளையங்களை போட்டு பிறகு அதனை ப்ரட் க்ரம்ப்ஸில் போட்டு புரட்டி எடுத்து சூடான எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்தால் மொறுமொறுப்பான ஆனியன் ரிங்க்ஸ் தயார்.
இதனை மிளகாய் தூள் கலந்த மயோனிஸுடன் தொட்டு சாப்பிட கூடுதல் சுவை கிடைக்கும்.