✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Onam Special Aviyal Recipe : ஓணம் சதயாவிற்கு சூப்பரான அவியல் செய்யனுமா? இதோ ரெசிபி..!

சுபா துரை   |  27 Aug 2023 02:01 PM (IST)
1

கேரளாவின் அறுவடை திருநாளான ஓணம்(Onam) பண்டிகையில் கொண்டாட பல்வேறு விசயங்கள் இருந்தாலும் ஓணம் சத்யாவில்(Onam Sadhya) கண்கவர், ருசியான உணவு வகைகள் மிகவும் பிரபலமானவை.

2

ஓணம் அன்று சமைக்கப்படும் ஓணம் சாத்யாவில் அவியலுக்கு முக்கிய இடம் உண்டு. அந்த அவியலை கேரள மணம் மாறாமல் எவ்வாறு செய்யலாம் என்று பார்ப்போம்.

3

தேவையான பொருட்கள் வாழைக்காய் – 1, கேரட் -1, சேனைக்கிழங்கு – சிறிய துண்டு, கொத்தவரங்காய் – 5, அவரை – 6, கோவைக்காய் – 10,வெள்ளைப் பூசணி – சிறிய துண்டு, பீன்ஸ் – 6, கத்தரிக்காய் -2 , முருங்கைக்காய் – 2 . உங்களுக்கு பிடித்த வேறு காய்கறிகளையும் இதனுடன் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், கட்டாயமாக, கோவக்காய், வாழைக்காய், முருங்கைக்காய், இருக்க வேண்டும்.

4

குறிப்பிடப்பட்டுள்ள காய்கறிகளில் எல்லாவற்றிலும் உங்களுக்கு தேவையான அளவு காய்கறிகளை எடுத்துக்கொண்டு, அந்த காய்கறிகளை சுத்தமாக கழுவி விட்டு, மிகவும் பொடியாக அல்லாமல், மிகவும் பெரியதாகவும் அல்லாமல் சரி அளவில் வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அவியலுக்கு காய்களை சற்று நீள வாக்கில் வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

5

இந்த காய்கறிகளை எல்லாம், அகலமான பாத்திரத்தில் சேர்த்து, கொஞ்சமாக உப்பு சேர்த்து, 1/2 ஸ்பூன் அளவு மஞ்சள்தூள் சேர்த்து, கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து, அடுப்பில் வைத்து மூடி, மிதமான தீயில் வேக வைக்க வேண்டும். காய்கறிகள் குழையாத வகையில் பக்குவமாக வேக வேண்டும். காய்கறிகள் குழைந்தால் அவியல் ருசி குறைந்து விடும்.

6

காய்கறி வெந்து கொண்டிருக்கும் போதே, அரைமூடி அளவு தேங்காயைத் துருவி எடுத்துக் கொண்டு, காரத்திற்கு தேவையான அளவு நான்கிலிருந்து ஐந்து பச்சை மிளகாய், 1 ஸ்பூன் சீரகம், 3 பல் பூண்டு இவைகளை ஒன்றாக சேர்த்து மிக்ஸி ஜாரில், திக்கான பேஸ்ட்டாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். தேங்காயை சற்று திப்பிதிப்பியாக இருப்பது போல் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். சில பேர் இந்த அவியலில் பூண்டு சேர்க்க மாட்டார்கள். பூண்டு சேர்த்தால் சுவை சற்று கூடுதலாக இருக்கும்.

7

காய்கறிகள் வெந்ததும் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை சேர்த்து உங்களுக்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, ஏழு நிமிடங்கள் வரை மிதமான தீயில் அவியலை கொதிக்க விடவேண்டும். இப்போது உப்பை சரி பார்த்து தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம்.

8

அவியலை இறக்குவதற்கு 2 நிமிடத்திற்கு முன்பு, இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு தயிரை சேர்த்து கிளறி விட வேண்டும். புளித்த தயிரை சேர்க்க கூடாது. இப்போது தேங்காய் எண்ணெய்யில் கடுகு கருவேப்பிலை, வர மிளகாய் தாளித்து அவியலில் சேர்த்து இறக்கினால் சுவையான கேரளா ஸ்டைல் அவியல் தயார்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Onam Special Aviyal Recipe : ஓணம் சதயாவிற்கு சூப்பரான அவியல் செய்யனுமா? இதோ ரெசிபி..!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.