Palada Pradaman Recipe : வந்தாச்சு ஓணம்..இதோ இந்த பாலடை ப்ரதாமனை இப்போதே செய்து அசத்துங்கள்!
பாலடை ப்ரதமன் பொதுவாக ஓணம் அல்லது பண்டிகை நாட்களில் கேரளாவில் செய்யப்படும் ஒரு பாயசம் ஆகும். இதனை எப்படி செய்யலாம் என்று இங்கு காணலாம்..
தேவையான பொருட்கள் : 1/4 கப் அரிசி அடை, 500 மில்லி பால், 250 மில்லி தண்ணீர், 1/2 கப் சர்க்கரை, ஏலக்காய் 4, 2 டீஸ்பூன் நெய், 10 முந்திரி பருப்பு, 10 திராட்சை
முதலில் அடையை 4-5 நிமிடங்கள் வரை கொதிக்கவைத்து வடிகட்டி ஓரமாக வைத்து கொள்ளவும்.
அதன் பின் ஒரு பாத்திரத்தில் பால் மற்றும் தண்ணீரை ஊற்றி அடையை போட்டு மிதமான சூட்டில் 15 நிமிடங்கள் கொதிக்க விடவும். கொதித்த உடன் இவை பாதியாக வற்றி விடும்.
பிறகு இந்த கலவையில் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து விடவும். இதனுள் நசுக்கிய ஏலக்காயை சேர்த்து கலந்து விட்டு அடுப்பை அணைத்து விடவும்.
இப்போது வேறொரு பாத்திரத்தில் நெய் ஊற்றி அதனுள் முந்திரி மற்றும் திராட்சையை பொன்னிறமாகும் வரை வறுத்து பாயசத்திற்குள் ஊற்றி விட வேண்டும். அவ்வளவு தான் சுவையான பாலடை ப்ரதாமன் தயார்.