Oil Bathing : வாரத்தில் எத்தனை முறை எண்ணெய் தேய்த்து குளிக்கலாம்?
ஆண்களாக இருந்தால் புதன், சனி அதே பெண்களாக இருந்தால் செவ்வாய், வெள்ளி இந்த இரண்டு நாட்களில் ஏதேனும் ஒரு நாட்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகுறிப்பாக ஞாயிற்றுக்கிழமை எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது. எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு அசைவம் சாப்பிட்டால் காய்ச்சல், ஜலதோஷம், சளி பிடிக்கலாம் என சொல்லப்படுகிறது.
குழந்தைகள், சிறியவர்கள், பெரியவர்கள் யாராக இருப்பினும் பச்சை எண்ணெயில் குளிக்க கூடாது. எண்ணெயை நன்கு காய்ச்சி ஆற வைத்த பிறகே தேய்த்து குளிக்க வேண்டும்.
காலையில் வெயில் வருவதற்கு முன்பே குளிக்க வேண்டும். மாலையில் வெயில் தாழ்ந்த பிறகு குளிக்க வேண்டும். மாலையில் 6 மணிக்கு மேல் எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது.
உள்ளங்கை அளவிற்கு மட்டுமே எண்ணெய் எடுத்து உச்சந்தலையில் தடவி குளிப்பதே போதுமானது. உடல் உஷ்ணம் இருப்பவர்கள் சிறிதளவு எண்ணையை அடி வயிற்றில் தேய்த்து குளிக்கலாம்.
எண்ணெயை உடலில் தேய்த்த பிறகு ஒரு நாழிகை மட்டுமே, அது உடம்பில் இருக்க வேண்டும். அதாவது 24 நிமிடத்திற்குள் குளிக்க வேண்டும். எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது கட்டாயம் வெந்நீரில்தான் குளிக்க வேண்டும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -