Red Ant Chutney: இரும்புச்சத்து நிறைந்த உணவு.. சிவப்பு எறும்பு சட்னி ரெசிபி!
எறும்பு சட்னி அதிகம் விரும்பப்படக் காரணம், அதில் அதிக அளவு புரதம், கால்சியம், ஜிங்க், வைட்டமின் பி-12, இரும்புச் சத்து, மக்னீசியம், பொட்டாசியம், சோடியம் ஆகியவை நிறைந்துள்ளன. இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் மரங்களில் உள்ள சிவப்பு எறும்புகளை சேகரித்து அதிலிருந்து சட்னி தயாரித்து சாப்பிடுவர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇது Similipal kai chutney என்று அழைக்கப்படுகிறது.
இந்த சட்னியில் புரதம், கால்சியம் உள்ளிட்ட பல்வேறு சத்துக்களை அடங்கியுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது.
சுறுசுறுப்பையும் அதிகரிக்கிறது என கருதப்படுகிறது. சிவப்பு எறும்பு உடன் உப்பு, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு உள்ளிட்டவைகள் வைத்து அரைத்து சாப்பிடலாம்.
ஜிங்க், இரும்புச் சத்து, அமினோ அமிலங்கள் இதில் உள்ளதாகவும் மூளை வளர்ச்சிக்கும் உதவுவதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மன உளைச்சல், மயக்கம், மறதி உள்ளிட்டவற்றை சரிசெய்ய சிவப்பு எறும்பு சட்னி தீர்வாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
புவிசார் குறியீடு பெற ’Mayurbhanj Kai Society Limited ' நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் உணவுப் பட்டியலின் கீழ் விண்ணப்பம் செய்திருந்தனர். மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சகத்தின் சார்பில் சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -