Mexican Rice Recipe : மாடர்ன் மம்மிகளுக்கு ஒரு புதிதான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி..மெக்ஸிகன் ரைஸ் ரெசிபி இதோ!
போரிங்கான வெரைட்டி ரைஸை இன்னுமா குழந்தைகளுக்கு சமைத்து கொடுக்கிறீர்கள்?..கொஞ்சம் புதுசா சுவையான லஞ்ச் பாக்ஸ் ரெசிபியை தேடுகிறீர்களா? இதோ இந்த மெக்ஸிகன் ரைஸை ட்ரை செய்யுங்கள்!
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதேவையான பொருட்கள்: பாஸ்மதி அரிசி - 1 கப், தக்காளி - 4, பூண்டு - 4 பற்கள் நறுக்கியது, வெங்காயம் - 2 பொடியாக நறுக்கியது, பச்சை குடைமிளகாய் நறுக்கியது, சிவப்பு குடைமிளகாய் நறுக்கியது, மஞ்சள் குடைமிளகாய் நறுக்கியது, கேரட் நறுக்கியது, பச்சை பட்டாணி, எண்ணெய் - 1 மேசைக்கரண்டி, வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி, மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி, உப்பு - 1 தேக்கரண்டி,மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி,சீரக தூள் - 1/2 தேக்கரண்டி, ஆரிகனோ - 2 தேக்கரண்டி, தண்ணீர் - 2 கப்.
செய்முறை: முதலில் பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி, தண்ணீரில் ஊற வைக்கவும். பிறகு, தக்காளியை தண்ணீரில் வேகவைக்கவும், பின் நன்கு ஆறவிட்டு, தோல் உரித்து, மிக்ஸியில் போட்டு, மிளகாய் தூளுடன் சேர்த்து பேஸ்ட்டாக அரைக்கவும்.
பிறகு ஒரு அகல பேன்னில், எண்ணெய் மற்றும் வெண்ணெய் சேர்த்து, இதில் பூண்டு, வெங்காயம் போட்டு வதக்கவும்.வெங்காயம் பாதி வதங்கியதும், இதில் உப்பு, மிளகு தூள், சீரக தூள் போட்டு கிளறவும்.
அடுத்து இதில் அரிசி சேர்த்து 2 நிமிடத்திற்கு மெதுவாக கிளறவும்.அதன் பிறகு இதில் பச்சை குடைமிளகாய், சிவப்பு குடைமிளகாய், மஞ்சள் குடைமிளகாய், கேரட், பச்சை பட்டாணி போட்டு கிளறவும். இதனுடன் அரைத்த தக்காளி கலவை சேர்த்து கலந்துவிடவும்.
இறுதியாக ஆரிகனோ மற்றும் தண்ணீர் சேர்த்து 20 நிமிடம் குறைந்த தீயில், பேன்'னை மூடி வேகவைக்கவும்.அவ்வளவுதான் சுவையான மெக்ஸிகன் ரைஸ் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -