Cashew:நம்பமுடியாத நன்மைகளை தரும் முந்திரி - ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடலாம்?
உலர் பழங்களில் விலையிலும், மதிப்பிலும் உயர்ந்ததாக பார்க்கப்படுவது முந்திரி பருப்புகள். முந்திரியில் ஊட்டச்சத்துக்கள் அதிகம். இது அதிகளவில் ஸ்வீட்ஸுகளில் பயன்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில், பிரியாணி, கேசரி, புலாவ்வுடன் முந்திரி சேர்த்தால் சுவை அற்புதமாக இருக்கும். முந்திரி சுவையாக இருப்பது மட்டுமின்றி உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் (
குறிப்பாக முந்திரி பருப்புகளை பயன்படுத்துவது நமது இதயத்தின் ஆரோக்கியத்தை சிறப்பாக பராமரிக்க உதவுகிறது. முந்திரி பருப்புகளை உட்கொள்வது உடலின் வளர்சிதை மாற்றத்தை ஆரோக்கியமாக வைக்கிறது
முந்திரியில் மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளன. இவை ஆரோக்கியமான உணவுக் கொழுப்புகளின் நல்ல மூலமாகும். இந்த கொழுப்பு LDL கொழுப்பை (கெட்ட கொலஸ்ட்ரால்) குறைக்க உதவுகிறது,
முந்திரியில் மெக்னீசியம், தாமிரம், மாங்கனீஸ், துத்தநாகம், பொட்டாசியம், செலினியம் போன்ற தாதுக்கள் உள்ளன. இவை அனைத்தும் உடலின் ஆரோக்கியத்தை பராமரிக்கின்றன. முந்திரியில் கொலஸ்ட்ரால் அளவு மிகவும் குறைவு.
முந்திரிபருப்பில் உள்ள ஒலிக் அமிலம் இதய நோய் அபாயத்தை பெருமளவு குறைக்க உதவுகிறது. முந்திரி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு HDL கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது, அதாவது நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது. அதே நேரத்தில், ட்ரைகிளிசரைடு அளவு மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஒற்றைத் தலைவலி மற்றும் தலைவலி உள்ளவர்கள் முந்திரி பருப்பை சாப்பிடக்கூடாது. முந்திரியை அதிகளவில் எடுத்துகொள்வதும் ஆபத்து. அதை தேவைகேற்ப லிமிட்டாக பயன்படுத்த வேண்டும். அதிகமாக சாப்பிடுவது மாரடைப்பு, உடல் பலவீனம் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும். மேலும், இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் வாயு பிரச்சனைகளை உண்டாக்கும்.