Munthiri Kothu: புரோட்டீன் நிறைந்த முந்திரி ஸ்நாக் ரெசிபி! முந்திரி கொத்து செய்வது இப்படித்தான்!
அடுப்பில் ஒரு கடாய் வைத்து, அதில் பாசிப்பயிரை சேர்த்து லேசாக வறுத்து ஆற வைக்க வேண்டும். இதை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்து தட்டிற்கு மாற்றி இதில் ஏலக்காய் தூள் தூவிக்கொள்ள வேண்டும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபின் அதே கடாயில் எண்ணெய் சேர்க்காமல், துருவிய தேங்காய் சேர்த்து, நன்கு வாசம் வறும் வரை தீயாமல் வறுத்து, பின் அதில் சிறிது எள்ளு சேர்த்து லேசாக வறுக்க வேண்டும்.
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து, வெல்லம் சேர்த்து அதில் சிறிது தண்ணீர் ஊற்றி, அடுப்பின் தீயினை மிதமாக வைத்து, கரண்டியால் கிண்டி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். பாகு பதம் வரும் வரை கிண்டி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
பின் பாகை வடிகட்டி மற்றொரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதில் அரைத்த பாசிப்பருப்பு மாவு வறுத்து வைத்துள்ள தேங்காய் துருவல், சிறிது நெய் சேர்த்து மீண்டும் நன்றாக கிளறி விட்டு பிசைந்துக் கொள்ள வேண்டும்.
பிசைந்து வைத்துள்ள மாவை, சூடாக இருக்கும் போதே, கையில் சிறிது நெய் தடவி கொண்டு, சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்துக் கொள்ள வேண்டும். பிடித்த உருண்டைகளை, சுமார் 45 நிமிடங்கள் வரை அப்ப்படியே வைத்து விட வேண்டும்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து, இதில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடானதும், தீயினை சிம்மில் வைத்து விட்டு, உருண்டைகளை எடுத்து மைதா கரைசலில் டிப் செய்து எண்ணெய்யில் சேர்த்து, பொன்றமாக பொரித்து எடுத்தால் சுவையான முந்திரி கொத்து தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -