Moong Dal Fry :மூங் தால் ஃப்ரை... இப்படி செய்தால் சுவை சூப்பரா இருக்கும்!
300 கிராம் உடைத்த பாசி பருப்பை எடுத்து அதை தண்ணீல் மூன்று முறை நன்றாக கழுவி விட்டு ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, இதிலுள்ள தண்ணீரை வடித்து விட்டு இந்த பருப்பை ஃபேன் காற்றில் உலர வைக்க வேண்டும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகாட்டன் துணியின் மேல் இந்த பருப்பை காய வைத்தால் சீக்கிரம் ஈரப்பதம் இல்லாமல் உலர்ந்து விடும். பருப்பு நன்றாக உலர்ந்ததும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்க்கவும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது ஒரு ஸ்டீல் சல்லடையில் ஒரு கைப்பிடி அளவு பாசி பருப்பை சேர்த்து இதை கடாயில் உள்ள எண்ணெயில் வைத்து பொரித்தெடுக்க வேண்டும்.
பாசி பருப்பு மிக சிறிய அளவில் இருப்பதால் எளிதில் கறுகி விடும். இந்த முறையில் பொரித்தால் சரியான பதத்தில் கிடைக்கும். பாசி பருப்பு பொன்னிறமாக பொரிந்ததும் இதை எண்ணெயில் இருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். பாசி பருப்பை சிறிது சிறிதாக சேர்த்து பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு தட்டில் இரண்டு டிஷ்யூ பேப்பரை போட்டு அதன் மீது வறுத்த பாசி பருப்பை கொட்ட வேண்டும். இப்படி செய்வதால் பாசி பருப்பில் உள்ள எண்ணெய்யை டிஷ்யூ பேப்பர் உறிந்து கொள்ளும்.
இதில் தேவையான அளவு உப்பு, சிறிது பெருங்காயத்தூள், சிறிது மிளகாய் தூள் சேர்த்து கலந்து விட்டு சாப்பிடலாம். உப்பு மற்றும் மிளகாய் தூளை மிதமாக சேர்த்து கலந்து விட்டு ருசி பார்த்து விட்டு தேவைப்பட்டால் மீண்டும் சிறிது சேர்த்துக் கொள்ளலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -