Jackfruit Seed Fry : சூப்பர் காம்போ.. பலாக்கொட்டை வறுவல் ரெசிபி செய்முறை!
கடாயில் இரண்டு மேஜைக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும், பட்டை மீடியம் சைஸில் ஒரு துண்டு, 4 கிராம்பு, ஒரு அன்னாசி பூ, சோம்பு அரை ஸ்பூன் சேர்த்து 30 நொடிகள் வதக்கி விடவும்.
பின் இதில் பொடியாக நறுக்கிய இரண்டு மீடியம் சைஸ் வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளவும். வெங்காயம் வதங்கி வதங்கியதும், நறுக்கிய ஒரு பெரிய சைஸ் தக்காளி சேர்த்து, ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சியின் பச்சை வாசம் போனதும் கால் கிலோ அளவு நறுக்கிய பலாக்கொட்டையை சேர்க்கவும். இதை எண்ணெயில் ஒரு நிமிடம் வதக்கி விட்டு, இதில் இரண்டு ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள் சேர்க்கவும்.
கால் ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பையும் இதனுடன் சேர்த்து கிளறி விட வேண்டும். மசாலாவின் பச்சை வாசம் போகும் வரை வதக்கி விட்டு இதில் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக வைக்கவும்.
5 நிமிடத்திற்கு ஒரு முறை இதை திறந்து கிளறி விட்டு மீண்டும் மூடி போட்டு மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.
பலாக்கொட்டை வெந்து தண்ணீர் வற்றியதும் உப்பை சரிபார்த்து விட்டு, தேவைப்பட்டால் சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளலாம். இதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை தழை தூவி இறக்கி கொள்ளலாம்.