Mental health Tips:மூட் ஸ்விங்ஸா.. எப்படி சமாளிக்கணும்? சில டிப்ஸ் இதோ!
உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சூரிய ஒளியில் சிறிது நேரம் நிற்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களது கிரியேட்டிவ் பக்கத்தை வளப்படுத்துங்கள். வீட்டுக்குள்ளேயே உங்களது பொழுதுபோக்கு என்ன என்று அறிந்து அதனை வளர்த்துக்கொள்ளுங்கள். உங்களைப் பிஸியாக வைத்துக் கொள்ளுங்கள். மூட் ஸ்விங்க்ஸ் இருக்கும்போது உங்களை நீங்கள் ரிலாக்ஸ் செய்ய வேண்டியவைகளை செய்யுங்கள்.
வைட்டமின் D மற்றும் B12 அளவைச் சரிபார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் மனநிலையை உடனடியாக எனர்ஜெட்டிக் ஆக்கிக்கொள்ள உங்கள் நண்பர்களுடன் தொடர்ந்து இணைந்திருக்க மறக்காதீர்கள்.
உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்குங்கள்.அது உங்கள் மனதை ரிலாக்ஸ் செய்ய உதவும்.
மாய்ஸ்சரைசர் தடவவும், வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும், இல்லாவிட்டால் சிறிது உடற்பயிற்சி செய்யவும், லிப் பாம் பயன்படுத்தவும், தலைமுடிக்கு எண்ணெய் தடவவும், ஆரோக்கியமான உணவுகளை உண்ணவும், சரியான நேரத்தில் தூங்கவும். இவை நாம் தவறவிடக் கூடாத சில விஷயங்கள், ஏனெனில் இது நம் உடல் தோற்றத்தைப் பாதிக்கலாம் அல்லது எடையைக் குறைக்கலாம், மேலும் இது நிச்சயமாக நம்பிக்கையை பாதிக்கும்.
உங்கள் மன ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். உங்களுக்காக ஒரு ஜர்னலை (அதாவது தினசரி வேலைகளை பற்றி எழுதுதல்) பராமரித்தல், உங்கள் தேவைகளை வெளிப்படுத்துதல், மக்களுடன் ஆரோக்கியமான உறவுகளை உருவாக்குதல், தேவைப்பட்டால், ஒரு தெரபிஸ்ட்டைப் பார்ப்பது, ஒரு நாளைக்கு 10 நிமிடங்கள் இருந்தாலும், தியானம் செய்வது போன்றவை மிக முக்கியமான விஷயங்கள்.
சூடான பானங்களாக இருந்தாலும் உங்களை ஹைட்ரேட் செய்ய அது உதவியாக இருக்கும். வெதுவெதுப்பான நீர் அல்லது பழச்சாறுகள் உங்களை நீரேற்றமாக வைத்திருக்க அற்புதமான வழியாகும். ஒரு நாளில் ஒரு கப் காபி அல்லது தேநீர் நல்லது, ஆனால் அதிகமாக வேண்டாம், ஏனெனில் அது காபி அடிக்ஷன் பழக்கத்துக்கு வழிவகுக்கும்.