Menstruation Hygiene Day : இன்று மாதவிடாய் சுகாதார தினம்.. இந்த நாளை குறித்த சில தகவல்களை இங்கு காண்போம்!
மாதவிடாய் சுகாதார நாள் ஒவ்வொரு ஆண்டும் மே 28 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமாதவிடாய் குறித்து வெளிப்படையாகப் பேசுவதில் காட்டப்படும் தயக்கத்தைத் தகர்ப்பதும், உலக முழுவதுமான பெண்கள் மற்றும் பதின்மச் சிறுமியரின் மாதவிடாய் சுகாதாரத்தைப் பேணுவதற்கும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.
மாதவிடாய் சுகாதார தினம் 2013 இல் வாஷ் யுனைடெட் - ஜெர்மன் தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் தொடங்கப்பட்டது. முதல் மாதவிடாய் சுகாதார தினம் 2014 இல் கொண்டாடப்பட்டது.
சமூகத்தின் மூடநம்பிக்கை மற்றும் போதிய விழிப்புணர்வுகள் இல்லாத காரணத்தால் பல வளரும் நாடுகளில் இளம் பெண்கள் மத்தியில் மாதவிடாய் சுகாதாரம் பற்றிய அறியாமை இருந்து வருகிறது.
பல சமூகத்தை சேர்ந்த பெண்களுக்கு சுத்தமான நீர் மற்றும் சானிட்டரி நாப்கின் கிடைக்காததால் அவர்களின் அடிப்படை கல்வி பாதிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பள்ளியில் இருந்து பலரும் பாதியில் நிற்கும் நிலை ஏற்படுகிறது.
அருணாசலம் முருகானந்தம், இந்தியாவில் பெண்களுக்கான மலிவான சானிட்டரி பேட்களை தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்தார்.
2030 ஆம் ஆண்டில், உலகெங்கிலும் உள்ள பெண்கள் மாதவிடாய் சுகாதாரத்தைப் பற்றி அறிந்துகொள்வதை மாதவிடாய் சுகாதார தினம் உறுதிசெய்கிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -