Fruits: ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் பழங்கள் என்னென்ன?
பழங்கள் ருசியானவை மட்டுமல்ல ஆரோக்கியமானவையும் கூட. நோய் எதிர்ப்பு சக்தியும், ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் பண்புகளும் கொண்டவை. பழங்கள் சிலருக்கு மிகவும் பிடித்தமான உணவாக இருக்கும்.
உணவிற்கு முன் பழங்களை சாப்பிட்டு அரை மணிநேரத்திற்கு பிறகு மற்ற சமைத்த உணவுகளை சாப்பிடலாம். இரவும் உணவிற்கு முன் பழங்களை சாப்பிடலாம். ஒரு நாளைக்கு குறைந்தது 2 வகையான பழங்கள் சாப்பிட வேண்டும்.
வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய், நோய் தீர்க்கும் நிவாரணி. உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் ஒரு சிறந்த ஆன்ட்டி ஆக்ஸிடென்ட். நெல்லிக்கனியில் 80% நீர் சத்தும், புரதம், மாவுச் சத்து, நார் சத்து, வைட்டமின் மற்றும் தாதுப் பொருட்களும் உள்ளன.
தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால், உடல் கொழுக், மொழுக் என்று வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது. இதில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால்ஷீயம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் இருப்பதாகவும், மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக உள்ளது.
உடலில் கொலஸ்ட்ரால் அதிகம் இருந்தால், தினமும் ஒரு கையளவு பச்சை திராட்சை சாப்பிடுங்கள். இதனால் அதில் உள்ள pterostilbene என்னும் உட்பொருள் கெட்ட கொலஸ்ட்ராலைக் கரைத்து,
கருப்பு திராட்சை சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது. ஒவ்வொரு நாளும் காலையில் ஒரு கையளவு திராட்சையை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவை குறைத்து விடும்.
ஹார்மோன் குறைபாடுகள் நீங்கி, கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கும். மாதுளை, வயிற்றில் குவிந்துள்ள தேவையற்றக் கொழுப்புகளை நீக்கும் தன்மை உடையது.