Coffee and Liver Health : காபி, கல்லீரல் நலம்.. என்ன தொடர்பு? ஆய்வு சொல்வது என்ன?
காபியில் காணப்படும் காஃபின், பாலிபினால்கள் மற்றும் பிற இயற்கை பொருட்கள், டைப் 2 நீரிழிவு (T2D) உள்ள அதிக எடை கொண்டவர்களில், ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோயின் (NAFLD) தீவிரத்தை குறைக்க உதவும் எனக் கண்டறியப்பட்டுள்ளது
இந்த கொழுப்பு கல்லீரல் நோய் என்பது கல்லீரலில் கொழுப்பு படிவதால் ஏற்படும் கல்லீரல் கோளாறுதான்.
இது சிரோசிஸ் (கல்லீரலில் தழும்புகள்) மற்றும் கல்லீரல் புற்றுநோயாக மாறலாம் என்று போர்ச்சுகலை தளமாகக்கொண்ட கோயம்ப்ரா பல்கலைக்கழகத்தின் ஆய்வு தெரிவிக்கிறது.
நவீன உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக, உடல் பருமன் அதிகரிப்பு இது போன்ற கல்லீரல் நோயின் நிகழ்வுகளும் அதிகரித்து வருகின்றன, இது இறுதியில் மிகவும் கடுமையான மற்றும் மீள முடியாத நிலைமைகளாக உருவாகலாம் என்று ஆய்வின் ஆசிரியர் ஜான் கூறுகிறார்.
சிறுநீரில் உள்ள காஃபின் மற்றும் காஃபின் அல்லாத வளர்சிதை மாற்றங்களின் அதிக அளவுகள் தீவிரத்தன்மையுடன் தொடர்புடையதாக இருக்கிறது. அதன்படி ஆய்வில், அதிக காபி உட்கொள்ளும் நபர்கள் ஆரோக்கியமான கல்லீரல்களைக் கொண்டிருந்தனர்,
ஆனால் அதிக காஃபின் உட்கொண்டவர்களுக்கு கல்லீரல் ஃபைப்ரோஸிஸ் வருவதற்கான வாய்ப்புகளும் குறைவாகக் காணப்பட்டது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.