Health: ஜிம்முக்கு போறீங்களா..? அப்போ இதெல்லாம் கவனத்தில் வைச்சுக்கோங்க!
நவீன காலத்தில் மாறி வரும் வாழ்வியல் முறைகளால் உடல் பருமன் பிரச்சனை அதிகமாகி வருகிறது. எடை குறைப்பிற்கு மேற்கொள்ளப்படும் வழிமுறைகள் சில சமயங்களில் ஆபத்தாக முடிந்துவிடுகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசீரான உடற்பயிற்சி மூலம் மட்டுமே உடல் எடையை குறைக்க வேண்டும் என்றும் குறைந்த காலத்தில் உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தை கைவிட வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர்.
உடற்பயிற்சிக்காக ஜிம் செல்கிறீர்கள் என்றால் உங்கள் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நீர்ச்சத்து இருந்தால் தான் உடல் எடை சீராக இருக்கும். அன்றாடம் 8 முதல் 10 க்ளாஸ் தண்ணீர் அருந்துங்கள்.
உணவில் புரத சத்து நிறைந்திருப்பது முக்கியமான ஒன்றாகும். நம் உடலில் ஒவ்வொரு செல்லும், திசுக்களும், சதையும், ரத்தமும் புரதத்தினால் ஆனது.
அதிகாரப்பூர்வ ஆராய்ச்சிகளின்படி, கார்போஹைட்ரேட் குறைவான உணவுமுறை என்பது, தினசரி அளவில் 130 கிராமுக்கும் குறைவான அளவில் கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்துக்கொள்வதாகும்.
பதப்படுத்திய உணவுகள் என்பவை அதிக காலம் கெடாமல் இருக்க அல்லது அதிக சுவை தருவதற்காக மாற்றம் செய்யப்பட்டவை. பொதுவாக உப்பு, எண்ணெய், சர்க்கரை அல்லது நொதித்தல் முறையை பயன்படுத்தியிருப்பார்கள்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -