Mango:கோடைக்கு ஏற்ற குளுகுளு இளநீர்,மாம்பழ மில்க்ஷேக் - ரெசிபி இதோ!
மாம்பழம் வைத்து செய்யப்படும் உணவு யாருக்குத்தான் பிடிக்காது. இளநீர், மாம்பழம் வைத்து திக்ஷேக் செய்யலாம். தேவையெனில் இதில் சிறிதளவு பால் சேர்க்கலாம். நல்ல பழுத்த மாம்பழமாக தேர்வு செய்யவும். இளநீரில் நீர், தேங்காய் இரண்டையும் தனியே எடுக்கவும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகோடையில் உடலின் வெப்பநிலையை சமநிலையில் வைக்க இளநீர் உதவும். இதில் எலக்ட்ரோலைட்கள் அதிகமாக இருக்கும்.
மாம்பழத்தை தோல் நீக்கி மிக்ஸியில் சேர்க்கவும். இதோடு, இளநீர் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
தேங்காய் இளசாக இருந்தால் மட்டும் இதோடு சேர்க்கவும். சிறிதளவு ஏலக்காய் பொடி, இனிப்பு தேவையெனில் சர்க்கரை சேர்க்கலாம். இல்லையெனில் கன்டன்ஸ்டு மில்க் சேர்த்து அரைத்தால் மாம்பழ, இளநீர் ஷேக் தயார்.
மாம்பழம், இளநீர் இரண்டில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன. இளநீர், மாம்பழ ஷேக்கை ஃப்ரிட்ஜில் வைத்து குடிக்கலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -