Mango Pickle Recipe : மாங்காய் ஊறுகாய்...இப்படி செய்யுங்க மாஸாக இருக்கும்!
மாங்காய் ஊறுகாய் செய்ய தேவையான பொருட்கள் : மாங்காய் - 1 நறுக்கியது, கடுகு - 1 தேக்கரண்டி, வெந்தயம் - 1 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 4 மேசைக்கரண்டி, உப்பு - 2 மேசைக்கரண்டி
தாளிக்க தேவையான பொருட்கள் : நல்லெண்ணெய் - 1/2 கப், கடுகு, பூண்டு, சிவப்பு மிளகாய் - 3, பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி, கறிவேப்பிலை
செய்முறை: ஒரு பானில் கடுகு, வெந்தயம், சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும். பின்பு அதை நன்கு ஆறவிடவும். ஆறிய பிறகு மிக்ஸியில் சேர்த்து பொடியாக அரைக்கவும்.
ஒரு பானில் நல்லெண்ணெய், கடுகு, பூண்டு, சிவப்பு மிளகாய் சேர்த்து பொரிய விடவும். கடுகு பொரிந்ததும் கறிவேப்பிலை சேர்க்கவும். இந்த தாளிப்பை மாங்காய் ஊறுகாய் உடன் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
அவ்வளவுதான் சூப்பரான சுவையான மாங்காய் ஊறுகாய் தயார். பழைய சாதம், தயிர் சாதம், சாம்பார் சாதம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் நாவில் சொர்க்கம்தான்!