✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Thandai Recipe : சம்மர் ஸ்பெஷல் ட்ரிங்க்..சுவையான தண்டாய் ரெசிபியை இன்றே ட்ரை செய்யுங்கள்!

சுபா துரை   |  28 Apr 2024 11:28 PM (IST)
1

தேவையான பொருட்கள் : பால் - 1 1/2 லிட்டர், குங்குமப்பூ, பாதாம் - 1/4 கப், முந்திரி பருப்பு - 1/4 கப், பிஸ்தா - 1/4 கப், முலாம்பழம் விதைகள் - 1/4 கப், கசகசா - 1 1/2 மேசைக்கரண்டி, சோம்பு - 2 மேசைக்கரண்டி, மிளகு - 2 தேக்கரண்டி, ஏலக்காய் - 1 தேக்கரண்டி, சூடான தண்ணீர், காய்ந்த ரோஜா இதழ்கள், சக்கரை - 3/4 கப், ரோஸ் எசென்ஸ் - 1/4 தேக்கரண்டி.

2

செய்முறை : முதலில் தண்டாய் செய்வதற்கு பாலை கொதிக்க வைத்து அதில் குங்குமப்பூ சேர்த்து கொதிக்கவைத்து இறக்கிவைக்கவும்.

3

பின்பு ஒரு பாத்திரத்தில் பாதாமை சூடான தண்ணீரில் 6 மணிநேரம் ஊறவைக்கவும். மற்றோரு பாத்திரத்தில் முந்திரி, பிஸ்தா, முலாம்பழ விதைகள், கசகசா, சோம்பு, மிளகு, ஏலக்காயை சேர்த்து சூடான தண்ணீரில் 6 மணிநேரம் ஊறவைக்கவும்.

4

பின் ஊறவைத்த பாதாமை தோல்நீக்கி வைக்கவும். ஊறவைத்த மற்ற பொருட்களை நீர் இன்றி மிக்ஸியில் போட்டு, தோல்நீக்கிய பாதாம் மற்றும் காய்ந்த ரோஜா இதழ்கள் சேர்த்து தண்ணீர் அல்லது பால் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

5

பிறகு ஒரு அகலமான கடாயில் குங்குமப்பூ சேர்த்த பாலை ஊற்றி அதில் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கலந்துவிடவும். பின்பு சர்க்கரை சேர்த்து கலந்து, இறுதியாக ரோஸ் எஸ்சென்ஸ்சை சேர்த்து கிளறி ஆறவிடவும்.

6

அவ்வளவு தான் ஆறியதும் பிரிட்ஜில் வைத்து, குங்குமப்பூ, ரோஜா இதழ்கள் தூவி பரிமாறவும்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Thandai Recipe : சம்மர் ஸ்பெஷல் ட்ரிங்க்..சுவையான தண்டாய் ரெசிபியை இன்றே ட்ரை செய்யுங்கள்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.