Pani Puri : பானிபூரி பிரியரா நீங்கள்? இனிமே தயங்காமல் சாப்பிடலாம்!
கடைகளில் உண்பது அதிக கலோரியை உடலுக்குத் தரும். இதனைத் தவிர்க்கபூரிகளை வீட்டிலேயே செய்யுங்கள்.குறைந்த பட்ச எண்ணெய் உபயோகத்துடன் ஏர்-பிரையரில் பொரித்து எடுத்து கோல்கப்பா உருண்டைகளை வீட்டிலேயே தயாரிக்கவும். பூரிகளை பேக்கிங் செய்வதன் மூலம் வீட்டிலேயே எளிதாக அதனை சேமித்து வைக்கலாம் என்று உணவியல் நிபுணர் பரிந்துரைக்கிறார்.
பானி பூரியில் வைக்கும் உருளைக்கிழங்கின் அளவை கணிசமாக நீக்கி அல்லது மொத்தமாகவே இல்லாமல் செய்து பானி பூரியை ஆரோக்கியமானதாக மாற்றலாம். உருளைக்கிழங்கிற்கு பதிலாக மசித்த கொண்டைக்கடலை போன்ற ஆரோக்கியமானவற்றை பயன்படுத்தலாம்,. இது புரதச்சத்து நிறைந்ததாகவும், ஊட்டச்சத்துடன் இருக்கும்.
கோல்கப்பா அல்லது பானி பூரியை குறைந்த கலோரியிலான சிறப்பான சுவையான உணவாக மாற்றலாம்.சரியான அளவில் இதனை உட்கொள்ளும்போது, ‘பர்கர்கள், பீஸ்ஸாக்கள், மஞ்சூரியன், சீஸ் கார்ன் ரோல்’ போன்ற பிற விருப்பங்களுடன் அதனை ஒப்பிட்டுப் பார்த்தால், அது நிச்சயமாக குறைந்த கலோரி கொண்ட உணவாக இருக்கும். பானி பூரியை அளவோடு சாப்பிடுங்கள்.
பானி பூரியில் பயன்படுத்தப்படும் பானியில் ஏராளமான மசாலாப் பொருட்கள் உள்ளன, அவை உண்மையில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். நீங்கள் வீட்டில் பானி செய்தால், அதற்கான மசாலாப் பொருட்களை நீங்கள் நிச்சயமாக சேர்க்கலாம்.
பானி தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் புளி உண்மையில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கக்கூடிய இரும்புச்சத்துக்கான சிறந்த மூலமாகும். இதுதவிர புதினா, பெருங்காயம் , பெருஞ்சீரகம் விதைகள் , சீரகப் பொடி , கருப்பு உப்பு , ஜல்ஜீரா போன்ற குடல் ஆரோக்கியத்திற்கு குறிப்பிட்ட பொருட்களும் உள்ளன.
இந்த மசாலாப் பொருட்கள் நமது செரிமானப் பிரச்னைகளுக்கு தீர்வு அளிக்கும் வகையில் உள்ளன. இருப்பினும் அடிக்கடி பானி பூரி சாப்பிட கூடாது.