Cooking Tips : சப்பாத்தி மிருதுவாக வருவதற்கு இந்த மாதிரி செஞ்சி பாருங்க!
அனுஷ் ச | 21 Jun 2024 03:01 PM (IST)
1
டீ போடும் போது சிறிதளவு பெருஞ்சீரகத்தை சேர்த்து டீ போட்டால் நல்ல மணமாக இருக்கும்.
2
சப்பாத்தி மாவு அரைக்கும் போது சோயா பீன்ஸை சேர்த்து அரைத்தால் சப்பாத்தி நல்ல மிருதுவாக வரும்.
3
இரண்டு டம்ளர் உளுத்தம் பருப்பிற்கு ஒரு கரண்டி சாதம் சேர்த்து அரைத்து வடை சுட்டால் சுவையாக இருக்கும்.
4
தோசை மாவோடு சிறிதளவு கடலை மாவு சேர்த்து தோசை சுட்டால் தோசை பொன்னிறமாக வரும்.
5
எந்த வகை கூட்டு பொரியல் செய்தாலும் ஒரு டீஸ்பூன் தேங்காய் துருவல், 3 பச்சை மிளகாய், சிறிதளவு சீரகம் சேர்த்தால் சுவையாக இருக்கும்.