Chana Palak Rice Recipe: கொண்டைக்கடலை, பாலக்கீரை ரைஸ் ரெசிபி!
இரவு ஊறவைத்த கொண்டைக்கடலையை நன்றாக வேகவைத்து தனியே வைக்கவும். சுத்தம் செய்யப்பட்ட பாலக்கீரையை மிக்ஸியில் கொஞ்சம் அரைத்தெடுக்கவும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகுக்கர் அல்லது பாத்திரம் பயன்படுத்தலாம். அடுப்பில் மிதமான தீயில், குக்கரை வைத்து எண்ணெய் அல்லது நெய் 4 டேபிள் ஸ்பூன் ஊற்றவும். நெய் சூடானதும் அதில், பச்சை ஏலக்காய், பிரியாணி இலை, கிராம்பு, சீரகம், பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பாலக்கீரை விழுதை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
பாலக்கீரை கொஞ்ச்ம நிறம் மாறியதும் வேகவைத்த கொண்டைக்கடலையை சேர்த்து, கரம் மசாலா, உப்பு சேர்த்து கலக்கவும்.
இதோடு, ஊற வைத்த அரிசியை சேர்த்து குக்கரை மூடி 3 விசில் வர விடவும்.
இந்த முறையில் செய்ய கொண்டைக்கடலை வேக வைக்காமலும் சேர்க்கலாம். புலாவ் மாதிரி செய்யும் முறை. ரைஸ் மாதிரி செய்ய வேண்டும் என்றால் அரிசியை வேக வைத்து எடுக்கவும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -