Cabbage Rice Recipe: வைட்டமின் கே, ஏ நிறைய வேணுமா.. முட்டைக்கோஸ் ரைஸ் செஞ்சு சாப்பிடுங்க!
ஜான்சி ராணி | 27 Oct 2023 09:22 PM (IST)
1
அரிசியை நன்றாகக் கழுவி விடவும். பாஸ்மதி அரிசியையும் பயன்படுத்தலாம். 15 நிமிடங்கள் அரிசியை ஊற வைத்துகொள்ள வேண்டும்.
2
மிதமான தீயில் குக்கரில் நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய், சீரகம் போட்டு நன்றாக வதக்கவும்.
3
பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். இதோடு முட்டைக்கோஸ் சேர்த்து கொஞ்சம் வதங்கியதும் ஊற வைத்த அரிசியை சேர்த்து, தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி வைக்கவும்.
4
3-4 விசில் வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும். சூடான முட்டைக்கோஸ் ரைஸ் ரெடி.
5
இதற்கு பனீர், உருளைக் கிழங்கு ரோஸ்ட், சிக்கல், பீப் ஃப்ரை என உங்களுக்குப் பிடித்ததை சாப்பிடலாம்.
6
முட்டைக்கோஸ் பிடிக்காதவர்களும் இதை விரும்பி சாப்பிட வாய்ப்பு உள்ளது.