Mint Pulao: ஹெல்தி லஞ்ச் பாக்ஸ் டிஷ் - புதினா சாதம் ரெசிபி இதோ!
புதினா, துருவிய தேங்காய், பச்சை மிளகாய் ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து விழுதாக்கவும். மிதமான தீயில் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாகியதும் அதில் கடுகு போடவும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகடுகு வெடித்ததும், முந்திரி சேர்த்து பொன்னிறமாக வதங்கியதும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும்.
பொன்னிறமாக வெங்காயம் வதங்கியதும் அதில் புதினா விழுதை சேர்த்து வதக்கவும். வதங்கும்போதே அதன் நிறம் மாறும்.
அப்போது சாதத்தை அதில் சேர்த்து கிளறி இறக்கிவிடவும். இதற்கு உருளைக்கிழங்கு ரோஸ்ட், வறுத்த மீன், பீப் தவா கறி என உங்களுக்கு விருப்பமானதை தேர்வு செய்யலாம்.
புதினாவை அரைக்கும்போது மைய அரைத்துவிட வேண்டாம். கொஞ்சம் கசப்புத்தன்மை வந்துவிடும்.
இதே செய்முறையில் கொத்தமல்லி சாதமும் செய்து அசத்துங்க.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -