Multigrain Dosa: ஊட்டச்சத்துக்கள் நிறைந்த நவதானிய தோசை செய்வது எப்படி?
தோசையை நவதானிய தோசையாக செய்து சாப்பிட்டால் போதும்.
மொச்சை பயிறு, கொண்டைக்கடலை, கொள்ளு, காராமணி இவைகளை கழுவி இரவே ஊற வைக்க வேண்டும். உளுந்து, அரிசியை 2 மணி நேரம் ஊற வைக்கவும். வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வேர்க்கடலையை தவிர மற்ற பருப்புகளை 2 மணி நேரம் ஊற வைக்கவும். வேர்க்கடலையை சிவக்க வறுத்து ரவை போல பொடித்து கொள்ளவும்.
ஊறவைத்த பருப்புகளை உப்பு சேர்த்து நைசாக தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த மாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து 2 மணிநேரம் புளிக்க விட வேண்டும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடனாதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி எடுத்து பரிமாறவும்.
உடலுக்கு வலு சேர்க்கும் நவதானிய தோசை தயார். இந்த தோசை சுவை மிகுந்தது மட்டும் அல்லாமல் ஏராளமான சத்துக்கள் நிறைந்தது என்பதால் அடிக்கடி இந்த டிஷ்ஷை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
விதவிதமான சட்னி உடன் ருசியுடன் சாப்பிடலாம்.