Bottle Gourd : உடல் எடை குறையுமா? சுரைக்காயில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?
அபரிதமான ஆரோக்கிய நலன்களை கொண்ட காய்கறிகளில் சுரைக்காயும் ஒன்று. இது நீர்ச்சத்து மிகுந்த காய் வகை என்பதால் கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசுரைக்காயை சமைத்தும் உண்ணலாம் ஜூசாகவும் குடிக்கலாம். தினமும் ஒரு கிளாஸ் சுரைக்காய் ஜூஸ் குடிப்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
வெயில் காலத்தில் வெயிலைத் தணிக்க ஏதாவது பானத்தை அருந்த விரும்பினால் நீங்கள் சுரைக்காய் ஜூஸை தேர்ந்தெடுக்கலாம்.
ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, இது ஒரு தாகத்தைத் தணிக்கும் மற்றும் உடலை குளிர்விக்க உதவும், அதே நேரத்தில் உடலை நீரேற்றமாக வைத்திருக்கும்.
உடல் ஆரோக்கியத்தை பேணிக்காப்பதில் நம் ஒவ்வொருவம் அக்கறை கொண்டவராக இருக்கவேண்டாம். பொதுவாக அனைத்து வகை காய்கறிகளிலும் உடலுக்கு தேவையான பல்வேறு வகையான சத்துக்கள் உள்ளன.
ஆனால் நம்மில் பெரும்பாலானோர் நமக்கு பிடித்த சில காய்கறி வகைகளை மட்டுமே உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்கிறோம்.
மற்ற காய்கறிகளை ஒதுக்கி விடுகிறோம். எனவே முடிந்த அளவு இது போன்று அபரிதமான சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
உங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று இந்த சுரைக்காய் ஜூஸை அருந்தி பல்வேறு உடல் நலன்களைப் பெறலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -