Lime Benefits: தேகத்தை ஆரோக்கியமாய் பராமரிக்க உதவும் எலுமிச்சை... எப்படி தெரியுமா..?
உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், சரும அழகை பராமரிப்பதிலும் எலுமிச்சை பழம் முக்கிய பங்காற்றுகிறது.
நீரிலும், காற்றிலும் ஏற்படும் கதிரியிக்க அபாயத்தைத் தடுக்கும் ஆற்றல் எலுமிச்சை தோலில் உள்ள ப்யோபிளேன் என்ற சத்தில் உள்ளது.
சருமத்தில் இருக்கும் நச்சுக்களைப் போக்கும். எலுமிச்சையை நேரடியாக சருமத்தில் பயன்படுத்தும் போது அது தோலுக்கு சில பாதிப்புகளை ஏற்படுத்தலாம். எனவே அதனை நீருடனோ அல்லது வேறு ஏதேனும் பொருட்களுடனோ கலந்து பயன்படுத்த வேண்டும்.
எலுமிச்சை பழத்தை இரண்டு துண்டாக வெட்டி சருமம் மற்றும் மூட்டுகளில் உள்ள கருமை நிறப் பகுதிகளில் தொடர்ந்து தேய்த்து வருவதின் மூலம் அங்குள்ள கருமையை நீக்க முடியும்.
முடிக்கு ஷாம்பூ பயன்படுத்திய பிறகு, கடைசியாக ஒரு முறை இந்த எலுமிச்சை சாறு கலந்த தண்ணீரில் உங்கள் முடியை அலசி வந்தால் விரைவில் முடி பளபளப்பாகவும் வலுவானதாகவும் மாற்றம் அடைவதை காண முடியும்..
கோடை காலங்களில் இந்த எலுமிச்சை மற்றும் தண்ணீர் கலந்த கலவையை ஐஸ் கட்டிகளாக ஃப்ரீசரில் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அந்த ஐஸ் கட்டிகளில் ஒன்றை எடுத்து ஒரு டிஷ்யூவில் சுத்தி அதனை எண்ணெய் பிசுப்புள்ள தோல் பகுதியில் நன்றாக தேய்த்துவர அந்த இடம் பொலிவாகவும் பளபளப்புடனும் காணப்படும்.