Leftover Rice Chapathi : சாதம் மீந்து போய் விட்டதா..? கவலை வேண்டாம்! அதை வைத்து சப்பாத்தி செய்து அசத்திவிடுங்கள்!
சாதம் மீந்து போவது அனைவரது வீட்டிலும் நடப்பதுதான். அதனால் கவலை கொள்ள வேண்டாம். மீந்த சாதத்தை சப்பாத்தியாக மாற்றிவிடுங்கள். ரெசிபி இதோ..!
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதேவையான பொருட்கள்: மீதமான சாதம் - 1 கப், கோதுமை மாவு - 1 கப், உப்பு - 1 தேக்கரண்டி, எண்ணெய், நெய்.
செய்முறை: முதலில் ஒரு மிக்சர் ஜாரில் மீதமுள்ள சாதம், உப்பு மற்றும் கோதுமை மாவை சேர்த்து அரைக்கவும். அரைத்த மாவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி கோதுமை மாவு, எண்ணெய் சேர்த்து பிசையவும்.
மாவு தயாரானதும் அதன் மீது எண்ணெய் தடவி பாத்திரத்தை மூடி மாவை 30 நிமிடம் ஊறவைக்கவும்.பிறகு மாவை, சிறு உருண்டைகளாக பிரித்து ஒரு சிறு உருண்டையை சப்பாத்தி கல்லில் வைத்து தேய்க்கவும்.
இப்போது ஒரு தோசை கல்லை சூடாக்கி தேய்த்த சப்பாத்தியை போட்டு, சிறிது நெய் தடவி இருபுறமும் வேகவைக்கவும்.
அவ்வளவுதான் சுவையான மீதமான ரைஸ் சப்பாத்தி தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -