Choco Truffles Recipe : அசத்தலான சாக்கோ ட்ரஃபிள்ஸை வீட்டில் செய்து குழந்தைகள் மனதை கவருங்கள்!
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் பொருள் சாக்லேட். இந்த மனதை மயக்கும் சாக்கோ ட்ரஃபிள்ஸ் ரெசிபியை வீட்டில் செய்து அசத்துங்கள்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதேவையான பொருட்கள்: டார்க் குக்கிங் சாக்லேட் - 250 கிராம், ஃப்ரெஷ் கிரீம் - 160 கிராம், உப்பில்லாத வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி, வெண்ணிலா எசென்ஸ் - 1 தேக்கரண்டி, கோகோ பவுடர், கலர் ஸ்ப்ரிங்ல்ஸ், வால்நட்ஸ் நறுக்கியது, சாக்லேட் ஸ்ப்ரிங்ல்ஸ்.
முதலில் டார்க் குக்கிங் சாக்லேட்டை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும்.பிறகு ஒரு சாஸ் பானில் ஃப்ரெஷ் கிரீமை ஊற்றி குறைந்த தீயில் வைத்து கிண்டவும். ஃப்ரெஷ் கிரீம் கரைந்ததும் அடுப்பை அணைக்கவும்.
நறுக்கிய சாக்லேட் உள்ள பாத்திரத்தில் உப்பில்லாத வெண்ணெய், சூடான ஃப்ரெஷ் கிரீம், வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது சாக்லேட் கனாஷ் தயார்.
பிறகு சாக்லேட் கனாஷ் -ஐ ஒரு பாத்திரத்திற்கு மாற்றி 4 மணி நேரம் பிரிட்ஜில் வைக்கவும்.அடுத்து சாக்லேட் கலவையில் இருந்து சிறிதளவு எடுத்து உள்ளங்கையில் வைத்து உருட்டவும்.
பின்பு உருட்டிய உருண்டையை கோகோ பவுடர், கலர் ஸ்ப்ரிங்ல்ஸ், வால்நட்ஸ், சாக்லேட் ஸ்ப்ரிங்ல்ஸ் ஆகியவற்றில் தனித்தனியாக பிரட்டி எடுக்கவும்.அவ்வளவு தான் அருமையான நான்கு சாக்லேட் ட்ரஃபிள்ஸ் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -