Kumkumadi Thailam : இதை தொடர்ந்து பயன்படுத்தி வாருங்கள்.. சருமம் தங்கம் போல் ஜொலிக்கும்!
முன்பெல்லாம் அனைவருக்கும் சிவப்பான சருமம் வேண்டும் என்ற ஆசை இருக்கும். இப்போது அப்படி கிடையாது. பலருக்கும் நிறம் குறித்த விழப்புணர்வு உள்ளது. அதனால் சருமத்தை வெண்மையாக்கும் பொருட்களின் மவுசும் குறைந்துவிட்டது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசமீப காலத்தில் பெரும்பாலோனார் சருமத்தை பொலிவாக வைத்துக்கொள்ள ஆசைப்படுகின்றனர். இதற்கு எக்கச்சக்கமாக செலவழித்து வருகின்றனர்.
சந்தையில் ஆயிரம் பொருள் இருந்தாலும், காலம் காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் குங்குமாதி தைலம் போல் வராது.
சுத்தமான குங்குமாதி தைலம் கிடைப்பது அரிது. அப்படி கிடைத்தால், இரவில் முகத்தை கழுவிவிட்டு, சிறு துளிகள் குங்குமாதி தைலத்தை எடுத்து முகத்தில் மசாஜ் செய்யவும். மறுநாள் காலையில் குளிக்கும் போது முகத்தை வழக்கம் போல் கழுவிவிடவும்.
இப்படி தொடர்ந்து செய்து வந்தால், சருமம் பளபளவென இருக்கும், கரும்புள்ளிகள், தழும்புகள் மற்றும் முகப்பரு வடுக்கள் மறையும், சன்டான் நீங்கும் சருமத்தை ஈரப்பதமாக்கி இளமையான தோற்றத்தை பெற உதவும்.
சந்தனம், குங்குமப்பூ உள்ளிட்ட பல மூலிகைகள் பயன்படுத்தி செய்யப்படும் இந்த குங்குமாதி தைலத்தின் விலை அதிகம்தான்.நல்ல பலன்களை பெற தினமும் உடலுக்கு தேவையான தண்ணீரை பருகி, ஆரோக்கியமான உணவுகளை உண்டு, 8 மணி நேரம் தூங்கி, 30 - 40 நிமிடம் உடற்பயிற்சி செய்வதும் அவசியம். முக்கியமாக இதை பயன்படுத்தும் முன் பேட்ச் டெஸ்ட் செய்யவும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -