Mint Pulao : அலுவலகம் செல்பவர்களே... மதியம் என்ன சாப்பாடு கொண்டு போரது தெரியலயா? நீங்க இதை செய்து பாருங்க!
தேவையான பொருட்கள் : நெய் - 3 மேசைக்கரண்டி, பிரியாணி இலை , பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, சீரகம், மிளகு, வெங்காயம் - 2 , தக்காளி - 1 , உப்பு - 2 தேக்கரண்டி, கரம் மசாலா - 1 தேக்கரண்டி, புதினா இலைகள், பாஸ்மதி அரிசி - 300 மிலி, இஞ்சி - 1 துண்டு, பூண்டு - 3 பற்கள், பச்சை மிளகாய் - 5 , புதினா இலை, கொத்தமல்லி இலை, தேங்காய் - 1/4 கப், தண்ணீர்.
செய்முறை : முதலில் மிக்ஸியில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி, தேங்காய், சிறிதளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்தது குக்கரில் நெய், பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, பிரியாணி இலை, சீரகம், மிளகு ஒரு நிமிடம் நன்கு வதக்கி கொள்ளவும்.
அடுத்தது வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதன் பிறகு தக்காளி சேர்த்து பச்சை மனம் நீங்கும் வரை வதக்கவும். அடுத்தது அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறவும்.
அடுத்தது உப்பு, கரம் மசாலா, புதினா இலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கிளறிவிடவும். அடுத்தது பாசுமதி அரிசி, தண்ணீரை ஊற்றி கிளறிவிடவும்.
அடுத்தது குக்கரை மூடி வைத்து இரண்டு விசில் வரும் வரை வேகவைத்து இறக்கினால் சுவையான புதினா புலாவ் தயார்.