Cooking Tips : இந்த சமையல் டிப்ஸை தெரிஞ்சுகோங்க..உங்கள் வேலை எளிதாகிவிடும்!
சுபா துரை | 11 Mar 2024 07:11 PM (IST)
1
வெதுவெதுப்பான நீரில் உப்பு சேர்த்து அதில் பன்னீர் போட்டு எடுத்து பிறகு சமைத்தால் பன்னீர் மென்மையாக சுவையாக இருக்கும்.
2
தேங்காயை கீற சிரமமாக இருந்தால், தேங்காய் தொட்டியை சிறிது நேரம் தீயில் வாட்டி பிறகு கீறினால் எளிதாக வந்துவிடும்.
3
தோசை பொன்னிறமாக வர தோசை மாவுடன் சிறிது கடலை மாவு சேர்த்து ஊற்றினால், தோசை மொறுமொறுப்பாகவும் சுவையாகவும் வரும்.
4
அரிசி வெள்ளையாகவும் உதிரியாகவும் வர அரிசியை ஊற வைக்கும் போது ஐஸ்கட்டிகள் சேர்த்து ஊற வையுங்கள்.
5
கொத்தமல்லி, கறிவேப்பிலை இலைகளை ஃப்ரிட்ஜில் வைக்கும் முன் துணியில் சுற்றி வைத்தால் அவை நீண்ட நாட்களுக்கு பச்சையாக இருக்கும்.
6
கேரட் அல்வா செய்யும் போது பால் ஊற்றுவதற்கு பதிலாக பால்கோவா சேர்த்து எதோ ஒரு எசென்ஸ் சில துளிகள் சேர்த்தால் சுவை பிரமாதமாக இருக்கும்.