உங்கள் இதயம் காக்கும் ஆலிவ் ஆயில்.. நன்மைகள் என்ன?
லிவ் விதைகளில் இருந்து தயாரிக்கப்படுவது தான் இந்த ஆலிவ் எண்ணெய். இதனை அழகுசாதன பொருட்கள், மருந்துகள், சோப் என பலவற்றிலும் பயன்படுத்துகின்றனர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமையலுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இதில் ஆன்ட்டி ஆக்சிடன்ஸ்ட்ஸ் அதிகமாக இருப்பதால் இது சமையலுக்கு சிறந்தது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் என்பது ஒரு ரசாயனக் கலவைகள். இவை உடலில் உள்ள மாசுக்களை வெளியேற்ற உதவும். இந்த மாசுக்கள் உடலில் இருந்தால், உடலில் நோய்கள் வந்து தங்கிவிடும்
ஆலிவ் ஆயிலில் மோனோசேச்சுரேடட் கொழுப்பு அதிகமாக உள்ளது. மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு நிறைந்த உணவுப்பொருட்களை உண்பதன் மூலம் உங்கள் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருக்கலாம்
இது கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி இதய நோய்கள் மற்றும் இதய பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது. இதனை சாப்பிடுவதன் மூலம் கெட்ட கொழுப்பின் அளவு 6% முதல் 10% வரை குறையும்.
ஆலிவ் ஆயில் எக்ஸ்ட்ரா வெர்ஜின், வெர்ஜின், ரீஃபைண்ட் என்று மூன்று வகைகளில் கிடைக்கிறது. இவற்றில் எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் ஆயில் தான் உடலுக்கு அதிக நன்மைகள் சேர்ப்பது என்று கண்டறியப்பட்டுள்ளது.
ஆலிவ் ஆயிலில் ஆன்ட்டி இன்ஃப்ளமேட்டரி பண்புகள் உள்ளன. இயற்கையாகவே நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வளமாக கட்டமைக்கப்பட இது உதவும். இதில் உள்ள ஓலியோசாந்தல் எனும் வேதிப் பொருள் இபுப்ரோபென் போல் செயல்படவல்லது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -