Benefits Of Drinking Hot Water: கெட்ட கொழுப்பை குறைக்கும் வெந்நீர்: தினமும் அருந்துவதன் பலன்கள்!
நமது பிஸியான வாழ்க்கை முறை காரணமாக நாம் நமது ஆரோக்கியத்தில் சிறிதும் அக்கறை செலுத்துவதில்லை
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதவறான வாழ்க்கை முறை தேர்வுகள், ஆரோக்கியமற்ற உணவு முறைகள் மற்றும் உடல் உழைப்பின்மை ஆகியவை உடலில் கொலஸ்ட்ரால் திரட்சியின் பிரச்சனைக்கு வழிவகுக்கிறது.
கொழுப்பு நிறைந்த உணவுகள், புகைபிடித்தல் அல்லது மது அருந்துதல் ஆகியவற்றால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பு முதன்மையாக ஏற்படுகிறது.
கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, இரத்த ஓட்டம் பாதிக்கப்படும் மற்றும் இரத்தம் சரியாக இதயத்திற்குச் செல்லாதபோது, ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படலாம்.
வாழ்க்கைமுறையில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம், ஆரோக்கியமான கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தலாம்.
சூடான நீர் இரத்த திரவத்தை விரைவாக அதிகரிக்கிறது. இரத்த திரவங்கள் இல்லாததால், இரத்தம் நரம்புகளில் தடிமனாகத் தொடங்குகிறது.
ட்ரைகிளிசரைடு துகள்கள் நரம்புகளில் சேர்வதை வெந்நீர் தடுக்கிறது. அதனால் தினமும் வெதுவெதுப்பான நீர் அருந்தப் பரிந்துரைக்கப்படுகிறது.
தினமும் காலையில் அல்லது இரவு உறங்குவதற்கு முன்பு நன்கு காய்ச்சிய வெதுவெதுப்பான நீரை அருந்துவதை வழக்கப் படுத்திக் கொள்வது நல்லது.
பூண்டை வெந்நீரில் சேர்த்து சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் பிரச்சனை குறைகிறது. வெறும் வயிற்றில் பூண்டை தண்ணீருடன் சேர்த்து சாப்பிட்டால், இதயம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -