Kitchen Tips : மொக்கையான கத்திரிக்கோலை கூர்மையாக்க இதை ட்ரை பண்ணுங்க!
அனுஷ் ச | 07 Jun 2024 12:39 PM (IST)
1
அரிசி சேமித்து வைக்கும் டப்பாவில் 3 பிரியாணி இலையை போட்டு மூடி வைத்தால் வண்டு, பூச்சி அரிக்காமல் இருக்கும்.
2
வெங்காய தோல், பூண்டு தோல் அனைத்தையும் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து, அந்த தண்ணீரை வடிகட்டி கிச்சனை சுற்றிலும் தெளித்தால் கரப்பான் பூச்சி வராமல் இருக்கும்.
3
எண்ணெய் கவரை தூக்கி போடாமல் அதனை இரண்டாக கிழித்து காய்கறி நறுக்கும் பலகையில் தேய்த்தால் பளபளவென இருக்கும்.
4
தோசைக் கல்லில் தோசை சரியாக வரவில்லை என்றால் தோசை கல் சூடான பிறகு 2, 3 ஐஸ் கட்டிகளை தேய்க்க வேண்டும்.
5
பல் தேய்க்கும் பேஸ்ட் ஒரு டீஸ்பூன், உப்பு ஒரு சிட்டிகை அளவு எடுத்து மிக்ஸ் செய்து கத்திரிக்கோலை விலக்கினால் அது கூர்மையாகிவிடும்.
6
கேஸ் அடுப்பு கரையை போக்க, ஒரு டம்ளர் அளவு தண்ணீரில், இரண்டு ட்ராப் பல் தேய்க்கும் பேஸ்டை மிக்ஸ் செய்து துடைத்தால் கறைகள் நீங்கிவிடும்.