Fiber Foods : அன்றாட டயட்டில் இடம்பெற வேண்டிய நார்ச்சத்து நிறைந்த உணவுகள்!
ஆப்பிள் : அனைத்து வயதினருக்கும் ஏற்ற பழம் ஆப்பிள். 100 கிராம் ஆப்பிளில் 2 .5 கிராம் நார்சத்து நிறைந்துள்ளது. ஆப்பிள் படத்தின் தோல் பகுதியில்தான் அதிக நார்ச்சத்து உள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகொய்யாப்பழம்: அதிக நார்ச்சத்து நிறைந்த பழத்தில் கொய்யாப்பழமும் ஒன்று. 100 கிராம் கொய்யாப்பழத்தில் 5 கிராம் நார்ச்சத்து உள்ளது. இதில் உடல் வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின் சி, எ பி6 நிறைந்துள்ளது.
வாழைப்பழம் : மலிவாக கிடைக்கும் பழம் வாழைப்பழத்தில் நார்ச்சத்து உள்ளது. 100 கிராம் வாழைப்பழத்தில் 2.6 கிராம் நார்ச்சத்து நிறைந்துள்ளது. அதிலும் நாட்டு வாழைப்பழத்தில்தான் அதிக நார்ச்சத்து உள்ளது.
பச்சை பட்டாணி : பீன்ஸ் வகையை சார்ந்த பச்சை பட்டாணியில் அதிகப்படியான நார்ச்சத்து நிறைந்துள்ளது. 100 கிராம் பச்சை பட்டாணியில் 17 கிராம் நார்ச்சத்து உள்ளது. உடலுக்கு தேவையான நார்ச்சத்தில் 62% நார்ச்சத்து பச்சை பட்டாணியில் உள்ளது.
கருப்பு உளுந்து : கருப்பு உளுந்தில் அதிகப்படியான புரதம், இருப்புச்சத்து நிறைந்துள்ளது. 100 கிராம் கருப்பு உளுந்தில் 16 கிராம் நார்ச்சத்து உள்ளது. இதை தோலுடன் சாப்பிடும் போதுதான் முழுமையான நார்சத்து கிடைக்கும்.
கேரட் : காய்கறி வகையான கேரட்டில் வைட்டமின் எ, கே ,பி6 , இரும்புச்சத்து, மெக்னீசியம் நிறைந்துள்ளது. 100 கிராம் கேரட்டில் 2.8 கிராம் நார்ச்சத்து நிறைந்துள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -