Dandruff and Hair Fall: பொடுகு பிரச்சினையா? முடி உதிர்கிறதா? இதை செய்து பாருங்க!
நீண்ட நாட்களாக பொடுகு இருந்தால் தேங்காய் எணணெயைச் சூடு செய்து, அதில் கற்பூரத்தை நொறுக்கிப் போட்டு புகையவிட்டு சூடு ஆறும் முன்பு அதனை ஒரு பஞ்சால் தொட்டுத் தலையில் மயிர் கால்களில் படும்படி தடவ நாள்பட்ட பொடுகுத் தொல்லை நீங்கும். முடி உதிர்வதும் நிற்கும்.
ஒரு கப் மரிக்கொழுந்துடன், அரை கப் வெந்தயக்கீரையை அரைத்து தலைக்கு பேக் போட்டு 10 நிமிடங்கள் கழித்து தலையை நன்கு அலசினால் பொடுகு மறைந்து விடும்.
இரண்டு டீ ஸ்பூன் வெங்காய ஜூஸூடன் 3-4 டீ ஸ்பூன் லெமன் ஜூஸ் சேர்த்து கலந்து தலை ஸ்கால்ப்பில் தடவி பின் விரல் நுனியால் நன்றாக 5 நிமிடங்கள் வரை மசாஜ் செய்ய வேண்டும். அதன் பிறகு 15 நிமிடங்கள் அப்படியே விட்டு விட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவினால் பொடுகுத் தொல்லை நீங்கி ஆரோக்கியமான கூந்தலுடன் அழகான கூந்தலும் கிடைக்கும். இதனை வாரம் இருமுறை செய்யலாம்.
மருதாணி இலை முடிக்கு நல்ல சத்துக்களைக் கொடுக்கும். இதனை கடுகு எண்ணெயில் போட்டு கொதிக்க விட்டு, பின் அந்த எண்ணெயை குளிர வைத்து, தினமும் தலைக்கு தடவி வந்தால் முடி உதிர்வது உடனே நின்றுவிடும்.
. வெயிலில் அலைவதனால் தலைமுடி உதிர்வதை தடுக்க நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து தலைக்கு தேய்த்து வர முடி உதிர்வது தடுக்கப்படும்.