Kitchen Tips : மிளகாய் தூள் சிவப்பாக இருக்கணுமா? இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க!
அனுஷ் ச | 12 Jun 2024 11:42 AM (IST)
1
ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி அதில் 2, 3 கிராம்பை குத்தி ஃபிரிட்ஜில் ஒரு மூளையில் வைத்தால் துர்நாற்றம் வராது.
2
பச்சை மிளகாய் காம்பை நறுக்கிட்டு ஒரு பாத்திரத்தில் மூடி வைத்தால் பச்சை மிளகாய் ரொம்ப நாட்களுக்கு ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.
3
எலுமிச்சை பழத்தின் மீது சிறிதளவு தேங்காய் எண்ணெயை தேய்த்தால் எலுமிச்சை ரொம்ப நாட்கள் கெடாமல் இருக்கும்.
4
400 கிராம் வர மிளகாய்க்கு, 100 கிராம் கேஷ்மீரி மிளகாயை சேர்த்து 2 நாட்களுக்கு காயவைத்து அரைத்தால் மிளகாய்த்தூள் கலராக இருக்கும்.
5
வேப்பம் இலையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த தண்ணீரால் கிட்சனை சுத்தம் செய்தால் பூச்சிகள் வராது.
6
வெங்காயத்தையும் உருளைக்கிழங்கையும் சேர்த்து வைத்தால் உருளைக்கிழங்கு சீக்கரம் அழுகிவிடும். அதனால் இரண்டையும் தனி தனியாகதான் வைக்க வேண்டும்.