Macroni Recipe : சுவையான இந்தியன் ஸ்டைல் மக்ரோனி செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் : மக்ரோனி - 1 கப், வெங்காயம் - 2 நறுக்கியது, தக்காளி - 2 நறுக்கியது, பச்சை குடைமிளகாய் - 1/2 நறுக்கியது, இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி, வெங்காயத்தாள் - 1/2 கப் , ஆலிவ் எண்ணெய் - 1 மேசைக்கரண்டி, மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி, மிளகு தூள் - 1 தேக்கரண்டி, உப்பு - தேவையான அளவு, தக்காளி கெட்சப் - 1 மேசைக்கரண்டி, கொத்தமல்லி இலை
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : முதலில் மக்ரோனியை ஒரு பாத்திரத்தில் வேகவைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அடுத்தது அதில் வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
அதன் பின் தக்காளி, மிளகாய் தூள், உப்பு, மிளகு தூள் சேர்த்து, தக்காளி மசியும் வரை நன்கு வதக்கவும்.
அதன் பிறகு, அந்த மசாலா கலவையில் தக்காளி சாஸ், வெங்காயத்தாள் சேர்த்து வதக்கவும்.
கடைசியாக வேகவைத்த மக்ரோனி சேர்த்து மீதமான சூட்டில் கிளறிவிட்டு கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் சுவையான மக்ரோனி தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -