Cooking Tips : காலையில் சப்பாத்தி மாவு பிசைய கஷ்டமாக இருக்கிறதா? உங்களுக்கான டிப்ஸ் இதோ!
காலையில் சப்பாத்தி மாவு பிசைய சிரமமாக இருந்தால், மிக்ஸியில் கோதுமை மாவு, ஒரு கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு, 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து அரைத்தால் சப்பாத்தி மாவு தயாராகிவிடும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசப்பாத்திக்கு மாவு பிசையும் போது தண்ணீருடன் சிறிதளவு பால் சேர்த்து மாவு பிசைந்தால் நீண்ட நேரத்திற்கு மாவு ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.
காய்கறி பொரியல் மீதமாகிவிட்டால் அதனை சப்பாத்தி மாவின் நடுவில் வைத்து வட்டமாக தேய்த்து சப்பாத்தி செய்தால் ஸ்டப்டு (Stuffed) சப்பாத்தி தயார்.
சப்பாத்தி சாப்டாக வருவற்கு, தோசை கல்லில் சுடும் போது இரண்டு பக்கமும் 1 நிமிடம் வேகவைக்கவும். அதன் பிறகே எண்ணெய் ஊற்ற வேண்டும்.
சப்பாத்திக்கு மாவு பிசையும் போது 2 கப் கோதுமை மாவிற்கு , 3/4 டீஸ்பூன் உப்பு, 2 டீஸ்பூன் நெய், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி சாப்டாக வரும். நெய் பிடிக்காதவர்கள் எண்ணெய் பயன்படுத்தலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -