Kitchen Cleaning Tips : பளிச்சிடும் சிங்க், அடுப்பு வேண்டுமா? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!
ஃபிரிட்ஜ் துர்நாற்றம் அடிக்காமல் இருக்க, எலுமிச்சை தோலை சிறு துண்டுகளாக நறுக்கி ஃபிரிட்ஜில் வைத்தால் துர்நாற்றம் அடிக்காது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகேஸ் ஸ்டோவ் பர்னர் (Burner) கருத்து போய்விட்டால், ஒரு பாத்திரத்தில் சூடு தண்ணீர் எடுத்து அதில் எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு சோடா உப்பு சேர்த்து பர்னரை ஊறவைத்து தேய்த்தால் பளபளப்பாகிவிடும்.
புதிதாக வாங்கிய குக்கர் கருகாமல் இருக்க, தினமும் குக்கரில் தண்ணீர் ஊற்றி எலுமிச்சை பழத்தின் தோலை போட்டு ஊறவைத்தால் புதிதாகவே இருக்கும்.
புதிதாக வாங்கும் பாத்திரத்தில் ஒட்டி இருக்கும் ஸ்டிக்கரை நீக்க, அடுப்பில் வைத்து லேசாக சூடு காட்டினால் ஸ்டிக்கர் வந்துவிடும்
வாஷ்பேஷன் நிறம் மங்கி போய்விட்டால், எலுமிச்சை சாறு அல்லது வினிகர் தடவி சிறிது நேரம் கழித்து ஒரு துணியால் துடைத்தால் பளபளப்பாக ஜொலிக்கும்.
மிக்ஸி ஜாரின் பிளேடுகள் ரொம்ப கூர்மையாக இருந்தால் முதலில் கல் உப்பை போட்டு அரைக்கவும். அதன் பின் பயன்படுத்தவும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -