Semiya Kesari : ரவா கேசரி செய்து போர் அடித்துவிட்டதா? இனி சேமியாவில் ட்ரை பண்ணுங்க!
தேவையான பொருட்கள் : சேமியா - 250 கிராம், தண்ணீர் - 2 1/2 கப், கேசரி கலர் - 1 சிட்டிகை, சர்க்கரை - 3/4 கப், ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி, முந்திரி பருப்பு - 1 மேசைக்கரண்டி, திராட்சை - 1 மேசைக்கரண்டி, நெய் - 5 தேக்கரண்டி
செய்முறை : ஒரு பானில் நெய் ஊற்றி, சேமியாவை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். அதே பானில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சையையும் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வறுத்த சேமியாவை போட்டு வேகவைக்கவும். பாதி வெந்த நிலையில் கேசரி பவுடரை சேர்க்கவும்.
சேமியா முழுமையாக வெந்தவுடன் சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்க்கவும். சர்க்கரை கரையும் வரை வதக்கவும். சேமியா கெட்டியாக வரும் வரை காத்திருக்கவும். அதன் பின் வறுத்த முந்திரி, திராட்சையை சேர்க்கவும்.
சேமியா முழுமையாக வெந்தவுடன் சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்க்கவும். சர்க்கரை கரையும் வரை வதக்கவும். சேமியா கெட்டியாக வரும் வரை காத்திருக்கவும். அதன் பின் வறுத்த முந்திரி, திராட்சையை சேர்க்கவும்.