Hair Growth : தலைமுடி நல்லா அடர்த்தியா வளர வேண்டுமா? இதை பின்பற்றுங்க!
உங்களின் தலைமுடி வலுவிழந்து காணப்பட்டால் அது தலைமுடி வளர்ச்சியை பாதிக்கலாம். தலைமுடி வலுவிழந்து போவதற்கு ஹார்மோன் சமநிலையின்மை ,ஊட்டச்சத்து குறைபாடு,மன அழுத்தம் போன்ற பல்வேறு காரணங்கள் உள்ளன.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதலைக்கு மசாஜ் செய்வதால் ரத்த ஓட்டம் அதிகரிப்பதுடன், தலை முடியின் ஆரோக்கியத்திற்கு அவசியமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும். மசாஜ் செய்வதால் தலை முடி தடினமாகவும், வலிமையாகவும் மாற வாய்ப்புள்ளது.
முடி வளர்ச்சிக்காக கற்றாழையை பலவிதமாக பயன்படுத்தலாம். கற்றாழை தலை முடியை ஈரப்பதத்துடன் வைக்கும் இயற்கையான கண்டிஷனராகவும் செயல்படுகிறது.
முட்டையில் உள்ள அதிகப்படியான புரோட்டின் தலைமுடியை வலுவாக மாற்றுகிறது. முட்டையில் பயோட்டின், ஃபோலேட், வைட்டமின்கள் ஏ, டி உள்ளது.
கிரீன் டீயில் உள்ள ஆன்டி-ஆக்சிடென்ட் பண்புகள் முடி வளர்ச்சியை தூண்டலாம். கிரீன் டீயில் காணப்படும் கேட்டசின்கள் தலைமுடி உதிர காரணமான டைஹைட்ரோ டெஸ்டாஸ்டரான் ஹார்மோன் உற்பத்தியை தடுக்கிறது .
தலைமுடி செழித்து வளர்வதற்கு போதுமான அளவு நீர்ச்சத்து அவசியம். தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதால் கூட முடி உதிர்வை குறைக்கலாம். தண்ணீரால் அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் எளிதில் கிடைக்கின்றன .
- - - - - - - - - Advertisement - - - - - - - - -